fbpx
Others

வத்திராயிருப்பில் கம்மாள இனத்தவர் சிலரால் நடக்கும் அத்துமீறல்கள்.?

தேனி மாவட்டம் தேனியில் நேற்று 09.10 2023 -ம் தேதி தேனிமாவட்ட அனைத்துவிஸ்வகர்ம சமுதாய அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கம்மாள ஸ்ரீகருப்பசாமி கோவில் சம்பந்தமாக சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.    தலைமை:  செயல்தலைவர் திருவிஸ்வாபாலமுருகன்முன்னிலை கர்னல் திரு.இராஜேந்திரன்  மற்றும் கோயில் நிர்வாகி கூடலூரை சேர்ந்த திரு.எழில் அன்பன்  அனைவரையும் வரவேற்றுபேசினார். இந்நிகழ்ச்சியின் போது கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கம்மாளர் கருப்பசாமி திருக்கோயிலானது பல ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும். இக் கோவிலுக்கு விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த 3000 – தலைக்கட்டு பங்காளிகள் வழிபாட்டுத் தாரர்களாக இருந்து வருகின்றனர், கடந்த 2020 ஆண்டு ( 1 ) கோவில் அறங்காவலராக இருந்த A  கருப்பையா B  மாரிமுத்து C மாரியப்பன் ஆகிய மூன்று நபர்கள் பதவிக்காலம் முடிந்ததும் தொடர்ந்து கோயில் விஷயங்களில் தலையீடு செய்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளார்கள்…. ( 2 ) இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. (3) சில ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பங்காளிகளால் உருவாக்கப் பட்ட கம்மாள பரிபாலன டிரஸ்ட் ஒன்று இயங்கி வருகிறது, இந்த டிரஸ்ட்டினுடைய ஆலோசனை கேட்டு இந்து சமய அறநிலையத்துறை வரும் காலங்களில் அறக்காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், ( 4 ) கடந்த 2022 – ஆண்டு கும்பாபிஷேகம் நடத்திய முன்னாள் அறங்காவலர்கள் பக்தர்களிடமும், பங்காளிகளிடமும், ஊர் பொதுமக்களிடமும் பல கோடி ரூபாய் வசூல் செய்து முறையான கணக்குகளை கொடுக்காத காரணத்தினால் இந்து சமய அறநிலையத்துறை மீது பங்காளிகளுக்கு சந்தேகம் வருகிறது, விரைந்து கணக்குகளை அறங்காவலர்களிடம் வாங்கி சரிபார்த்து பக்தர்கள் முன்பு சமர்ப்பிக்க கேட்டு கொள்கின்றது. (5) மேற்கொண்ட விசயங்களை நிறைவேற்ற விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை துணை அலுவலர் முன்பாக பங்காளிகளையும், பக்தர்களையும் ஒன்று திரட்டி நவம்பர் மாதம் ஆர்ப்பாட்டம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கோவில் நிர்வாகிகள் திரு பரமசிவம், திரு சேகர், திரு செல்வக்குமார், திரு முத்துக்குமார், திரு கிருஷ்ணன், திரு ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு ராமராஜ் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.இந்த கூட்டம் நடைபெற்ற நிகழ்வு…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close