fbpx
Others

வடலூர்–தனியார் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.

கடலூர்: வடலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து ஒன்று சுமார் 50 பயணிகளுடன் சென்றது. வடலூர் அருகே ராசாகுப்பம் கிராம பகுதியில் அதிவேகமாக சென்றபோது பேருந்தின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து, எதிரே வந்த கார் மீது மோதி, சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி நின்றது.  இதில், காரில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி விக்டோரியா(65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது உறவினரான கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (52), அவரது மனைவி குணசீலி (50), மகள் ரித்திகா மேரி(10), உறவினர் பொன்னம்மாள் (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.மேலும், பேருந்து மோதியதில், சாலை ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்த, தாமரைச்செல்வன்(23), விஜயகுமார்(22) ஆகியோர் உயிரிழந்தனர். புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த இவர்கள், நெய்வேலியில் சமையல் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்தில் பயணித்த 20 பேர் உட்பட 24 பேர் காயங்களுடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 15 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வடலூர் போலீஸார், தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தேடி வருகின்றனர்.இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close