fbpx
Others

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்….?

சென்னை, ஜூன் 18: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட
செய்திக் குறிப்பு:வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனையொட்டிய மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.இப்புயல் சின்னம் ஜூன் 18-ஆம் தேதி மேற்கு-வடமேற்குதிசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், வானிலை சாதகம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் ஜூன் 18 முதல் ஜூன் 23 வரை மிதமான மழைக்கு வாய்ப் புள்ளது. ஜூன் 18-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூன் 18-இல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரைஅதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி. மீ. மழை பதிவானது. மேலும் பார்சன் வேலி (நீலகிரி) 110, போர்த்தி மந்து (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 100 மி.மீ. மழை பதிவானது.மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா குமரிக் கடல் மற்றும் வங்க கடலில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் இதனால் மீனவர்கள் இப்போது மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close