fbpx
Others

லிபியா நாட்டைத் தாக்கிய டேனியல் புயலால் பேரழிவு…

 அடித்துவரப்பட்ட உடல்கள் வீதிகளில் கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்கு 5,200 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 ஆயிரம் பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. சிரேனேக்கா மாகாணத்தில் உள்ள 3 பகுதிகள் பேரழிவு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிற பகுதிகளில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவம் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close