fbpx
Others

ரெட்ஹில்ஸ் நாரவாரி குப்பம் பேரூராட்சிசெயல்படுகிறதா என்று தெரியவில்லை.?

ரெட் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உழவர் சந்தையில் காய்கறி பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருவள்ளூர் மாவட்டம் வேளாண் விற்பனை துறை சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரெட்ஹில்ஸ் நாரவாரி குப்பம் பேரூராட்சி சோத்துப்பாக்கம் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகில் உழவர் சந்தை காய்கறிகள் விற்பனைக்கான 25 கடைகள் கட்டப்பட்டது.
கடைகள் கட்டி 13 ஆண்டுகள் ஆகியும் அங்குள்ள கடைகளில் காய்கறி விற்பனைகள் நடக்கவில்லை. அனைவரும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலையில் இருபுறமும் நடைபாதையில் அமர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வருகின்ற விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்கும் காய்கறிகள். பழங்கள். கீரைகள் போன்றவற்றை உழவர் சந்தையில் விற்க ஏற்பாடு செய்தால் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கலாம். என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து ரெட்ஹில்ஸ் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மற்றும்நார வாரிகுப்பம் பேரூராட்சி நிர்வாகமும் இந்த நடவடிக்கையை விரைவாக எடுத்துவிவசாய பொருட்கள் உழவர் சந்தையில் விற்பதற்கு ஏற்பாடு செய்வதோடு போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close