fbpx
Others

* ரெட்ஹில்ஸ்ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க விழா*

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் ரெட்ஹில்ஸ் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.கே. முகம்மது யூசுஃப் தலைமைமையில் நடைபெற்றது.லயன்ஸ் சங்கத்தின் கொடி வணக்கத்தை புள்ளிலைன் லயன்ஸ் சங்க செயலாளர் மந்திரமூர்த்தி வாசித்தார்.ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி லியோ சங்க ஆலோசகர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், லயன்ஸ் சங்கம், லியோ சங்கங்களைப் பற்றியும் இச்சங்கம் தொடங்குவதற்கான காரணத்தையும் இச்சங்கத்தின் மூலம் இதுவரை ஆற்றிய பணிகள் குறித்தும், இனிமேல் செய்யப் போகின்ற பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.சென்னை சோசியல் லயன்ஸ் சங்க துணைத்தலைவர் ஹனீஃபா, பொருளாளர் எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஆளுநர் வி.பஜேந்திரபாபு லியோ சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்முன்னாள் ஆளுநர் எஸ்.நகீன் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி லியோ சங்கத்தின் புதிய நிர்வாகிகளான தலைவராக ஆர்.கீர்த்தனா, துணைத்தலைவராக எம்.யாஸ்மின், செயலாளராக டி.புஷ்பலதா உள்ளிட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
இரண்டாம் துணை ஆளுநர் பி.மணிசேகர் 157 புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.உடனடி ஆளுநர் பி.வி. ரவீந்திரன், லியோ சேர்மன் எஸ்.சுந்தராமன். ஆர்.பி.கோத்தி ஜெயின்மகளிர்கல்லூரியின்முதல்வரும்லியோசங்கஒருங்கிணைப்பாளருமான  மோ.மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
புதிதாகலியோசங்கத்தலைவராகபொறுப்பேற்றுக்கொண்டஆர்.கீர்த்தனாஏற்புரையாற்றினார்.   இந்நிகழ்வில் ஜி.எல்.டி. நரசிம்மன், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர். இரா.ஏ.பாபு, வட்டாரத் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.முனுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரசேகர், செங்குன்றம் லயன்ஸ் சங்க தலைவர் ஆர்.செல்வக்குமார் உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். ஜி.வடிவேலன் நிகழ்வை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் சந்தியா நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close