ராதாகிருஷ்ணன் ஆசாரிக்கு நீதி கிடைக்குமா…? சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்எங்கே..?
70 ஆண்டுகளாக குடியிருந்தவரின் வீட்டை இடித்துத் தள்ளியது நான்குநேரி வானுவாமலை ஜீயர் மடம்…
பாமரன் கதறல்…
நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி தெற்கு மாட வீதியில் நாங்குநேரி ஜீயர் மடத்திற்கு பாத்தியப்பட்ட வீடு உள்ளது. இதில் கடந்த 70 ஆண்டுகளாக ராதாகிருஷ்ணன் ஆசாரி என்பவர் வசித்து வந்தார். அவர் முறைப்படி அடவோலை மூலம் மடத்திற்கு கட்டவேண்டிய தொகையை கட்டி வந்துள்ளார். இந்நிலையில் போலியாக மற்றொரு நபருக்கு கையூட்டுப் பெற்றுக்கொண்டு அடவோலையை தேவநல்லூரைச் சார்ந்த ஒருவருக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. இது சம்மந்தமாக வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜுயர் மடம் எந்த முன் அறிவிப்பும் இன்றி பாகவதர்களுக்கு பஜனை மடம் கட்டுவதற்கு இடத்தை கொடுத்துள்ளது. ஜீயர் மடத்தின் ஆலோசனைப்படி வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். எந்த பணப்பலமும், ஆட்பலமும் இல்லாத 70 ஆண்டுகளாக வசித்து வந்த நபரோ செய்வதறியாமல் கதறி அழுகிறார்.. அந்த ஏழை பாமரனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் பொதுமக்களும், அனைத்துக்கட்சிகள் சார்பாகவும் ஜுயர் மடத்தை எதிர்த்தும், கையூட்டு பெற்று போலியாக அடவோலை கொடுத்த மடத்து ஏஜென்டுகளை எதிர்த்தும் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளார்கள்.,பிரச்சினைகள் வரும் முன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீட்டில் வசித்து வந்த ஏழை பாமரனைகாப்பாற்றுவார்களா?? பொறுத்திருந்து பார்ப்போம்!!?


