fbpx
Others

ராணுவ அதிகாரிகள்மையத்தில், 156 பேருக்கு பயிற்சி நிறைவு விழா….

சிங்கப்பெண்ணே”.. வரலாற்றிலேயே முதல்முறை! எல்லையில் பெண் ராணுவ அதிகாரிகள்  -புள்ளி வைத்தது சென்னைதான் | 5 women Army officers to serve in Indian  borders for first time ...பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் மட்டுமின்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த மையத்தில், 11 மாத பயிற்சி பெற்ற 121 ஆண், 35 பெண் ஆகிய 156 பேருக்கு பயிற்சி நிறைவு விழா. அணி வகுப்பு விழா நேற்று ஓடிஏ வளாகத்தில் பரமேஸ்வர் திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் மேற்கு கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டி யார், ராணுவ பயிற்சி மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே பெர்னாண் டஸ் பங்கேற்று பயிற்சி நிறைவு செய்த ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.பின்னர் சிறப்பு அணி வகுப்பு நடத்திய அணிகளுக்கு தங்கம். வெண்கல பதக்கம், சிறப்பு வாள் போன்றவற்றை வழங்கினர். இதையடுத்து பயிற்சி முடித்தஅதிகாரிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகள். அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியின்போது இளம் ராணுவ அதிகாரிகளின் தோள்பட்டையில் மூடி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர சின்னத்தை, அவர்களது பெற்றோர் திறந்து வைத்து, அவர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தனர். பின்னர் ஒவ்வொரு அணியாக பிரிந்து தரையில் படுத்து தாய் மண்ணை முத்தமிட்டனர்.பயிற்சி முடித்த அனைவரும்சிலநாட்களில்தங்களுக்குஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணியில் சேர உள்ளனர். 49 வாரங்கள் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதால், பிரியா விடை பெற்றுக்கொண்டனர். வெளிநாடுகளைச் சேர்ந்த (பூட்டான், தான் சானியா) 2 ஆண் மற்றும் 2 பெண் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close