ராணிப்பேட்டை– தமிழ்நாடு வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது–அர்ஜுன் சம்பத்.

இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று ராணிப்பேட்டைக்கு வருகை தந்தார் ராணிப்பேட்டையில் உள்ள பிரித்திங்கா தேவி ஆலயத்துக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளரை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீஸ் கஸ்டடியில் வைத்து அடித்தே கொலை செய்திருக்கிறார்கள்.இந்தக் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு வழங்கவும் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை விடுத்தார் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் திமுக அரசு அதிக பணம் கொடுப்பவர்களையும் கட்சிக்காரர்களையும் அறங்காவலர்களாக நியமனம் செய்கின்றனர் இந்த நிலை மாற வேண்டும் என்றார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று படுகை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பாலாற்றில் மணல் கொள்ளை மற்றும் ரசாயன கழிவுநீர் கலந்து அதிக மாசடைந்துள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.ராணிப்பேட்டையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரியின் வீட்டில் 500 கோடி பிடித்துள்ளனர் பாலாறு பாதுகாக்கப்பட வேண்டும் திமுக ஆட்சியில் போதைப்பொருள், லஞ்சம், ஊழல், மணல் கொள்ளை, கூட்டு பாலியல் வன்புணர்வு, சொத்து வரி உயர்வுஇப்படி வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறதுதமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் வருகின்ற மாதம் ஏழாம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு காப்போம் ஆட்சியை மீட்போம் என்ற தலைப்பில்.பேரணி நடத்த உள்ளார்.இதற்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு தருகிறது திமுக ஆட்சி அகற்ற இந்து மக்கள் கட்சி அதற்கான வேலையை நடத்தி வருகிறது என்றார்