fbpx
Others

ராஜ் கிரண்–சூதாட்டம் குறித்து பிரபலங்களே ஊக்குவிக்கின்றனர்

ராஜ் கிரன்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கடந்த 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இந்நிலையில் அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.மேலும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர் சரத் குமார் நடித்திருந்தார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ரம்மி ஓர் அறிவுப்பூர்வமான விளையாட்டு எனவும் தோனி, ஷாருக்கான் கூட தான் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள் என விளக்கமளித்தார்.இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் ராஜ்கிரண், “சீட்டாட்டம் என்பது, மிக மிக மோசமான சூது. அதனால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்த பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது. சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும்போவதற்கு தயங்கமாட்டார்கள்.” என தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close