fbpx
Others

ராகுல் யாத்திரையை நிறுத்தமத்திய அரசு: தாக்கரே திடுக்கிடும் குற்றச்சாட்டு

  ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை நிறுத்தும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனாவை பரப்பியுள்ளது என உத்தவ் தாக்கரே திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். புனே, சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கொரோனா தொற்று மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில்ராகுல் யாத்திரையை நிறுத்த கொரோனாவை பரப்பியுள்ளது மத்திய அரசு: உத்தவ் தாக்கரே திடுக்கிடும் குற்றச்சாட்டு கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசும் மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த சூழலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீரி வரையிலான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டிற்கு மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இதுதொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். ஒற்றுமை யாத்திரையில் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். கொரோனா நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அரசு உயரதிகாரி பேச்சால் பரபரப்பு எனினும், இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் காந்திக்கு மட்டும் அரசு கடிதம் எழுதுவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், ராகுல் காந்திக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து மத்திய அரசு பயந்து போய் விட்டது என்றும் கூறியது. இந்த விவகாரத்தில் அரசு அரசியல் செய்கிறது என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தது. இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் சாம்னா பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில், மத்திய சுகாதார மந்திரி, ஒற்றுமை யாத்திரையில் ஒன்று கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றுங்கள் அல்லது பாதயாத்திரையை சஸ்பெண்டு செய்யுங்கள் என ஆலோசனை கூறியிருக்கிறார். ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் 100 நாட்களை கடந்து விட்டார். பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளார். மத்திய அரசால் சட்டப்படியோ அல்லது திட்டமிட்டோ அதனை நிறுத்த முடியவில்லை. அதனால் கொரோனா வைரசை மத்திய அரசே பரப்பி விட்டுள்ளது போல் தெரிகிறது என திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது. ராகுல் காந்தி பாதயாத்திரையை முன்னிட்டு கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் சரியானதே. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன், கொரோனா பெருந்தொற்றாக பரவியபோது, குஜராத்திற்கு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பை வரவழைத்தது நீங்கள். அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்களை திரட்டினீர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close