fbpx
Others

ராகுல்– மாணவர்களின் மனதில் விஷத்தை விதைப்பதா?

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரின் குப்பபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை அடிப்பதற்கு இந்து மாணவர்களை பெண் ஆசிரியையே ஊக்கப்படுத்துவது போன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முன்பு ஆசிரியை மன்னிப்பு கேட்டுள்ளார். ஆசிரியைக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். அந்த பள்ளிக்கு இதற்கு மேல் அனுப்ப போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைப்பதை விட ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் ஒன்றாக அன்பை கற்பிக்க வேண்டும். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும், ‘எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு என்ன வகையான வகுப்பறை மற்றும் சமூகத்தை கொடுக்க விரும்புகிறோம்’ என சரமாரியாக கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close