ராகுல் காந்தி–வயநாட்டில்100க்கு மேற்பட்ட வீடுகள் கட்டித்தரஉறுதி..

“அதேபோல், முகாம்களில் இருப்பவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும். மறுவாழ்வு அளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.“பாதிக்கப்பட்ட மக்களில் பலர், மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தனர். எனவே, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கே செல்ல வலியுறுத்தக்கூடாது. இது குறித்தும் கேரள அரசிடம் வலியுறுத்த உள்ளேன்,” என தெரிவித்தார்.முன்னதாக, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி வயநாடு வந்த ராகுல் காந்தி, நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். ரெயின் கோட் அணிந்தபடி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் வழியாக சென்ற அவர்கள், அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். மேலும், மேப்படி என்ற இடத்தில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
