fbpx
Others

ராகுல் காந்திமணிப்பூர் பயணம்–பாஜக தலைவர் சாரதா தேவிபாராட்டு.

மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை. இந்த மோதலில் பொதுமக்களில் 130

பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை குவித்தும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று 4 நாள் தங்கி சமரச முயற்சி மேற்கொண்டும், மணிப்பூர் இன்றும் பற்றி எரிகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றார்.அப்போது; வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். சாலை மார்க்கமாக செல்ல தடை விதித்த போதிலும் ஹெலிகாப்டர்களில் சென்று முகாம்களில் தங்கி இருந்தவர்களை ராகுல் காந்தி சந்தித்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே சமயம் தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த பயணத்தை பாராட்டுவதாக அம்மாநில பாஜக தலைவர் சாரதா தேவி தெரிவித்துள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close