fbpx
Others

ராகுல்காந்தி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை— தங்கபாலு

. நாகர்கோவில்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராகுல் காந்தி பாத யாத்திரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை- தங்கபாலுதங்கபாலு சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சாதி மத ரீதியாக மக்கள் பிளவுபட்டு இருக்கிறார்கள். எனவே அனைத்து மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கி இருக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணத்தில் ஏராளமான இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். மேலும் வழி நெடுகிலும் பொதுமக்கள் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். ராகுல் காந்தியின் பாத யாத்திரை குறித்து பேச பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை: தமிழகத்தில் நீட் தேர்வில் 50 சதவீதம் பேர் தோல்வி: கடந்த வருடத்தை காட்டிலும் தேர்ச்சி விகிதம் சரிவு கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க அரசு எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எண்ணற்ற புது புது திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தத் திட்டங்களை பா.ஜ.க. அழித்து வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. இதனால் இளைஞர்கள் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு வேலையற்ற இளைஞர்கள் அனைவருமே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்று இருக்கிறார்கள். .பா.ஜ.க. அரசு குறிப்பிட்ட 4 பேருக்காக பல லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

 

Related Articles

Back to top button
Close
Close