fbpx
Others

ராகுல்காந்தி….சுப்பிரமணியன் சுவாமி–சிறப்பு செய்தி

. புதுடெல்லி, நாடு வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து கொண்டிருக்கும் போது பல குடும்பங்கள் நிலையான வருமானத்திற்கு வழியில்லாமல் இருக்கின்றன. இந்தநிலையில் “திமிர் பிடித்த ராஜா” என்ற பிம்பத்தை மெருகூட்டுவதற்காகவே அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களவையில் விலைவாசி உயர்வு மீதான விவாதத்திற்கு பிறகு முகநூல் பதிவில் ராகுல்காந்தி கூறியதாவது:- நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் முயற்சித்ததாக ராகுல்காந்தி கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எப்படி இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் போராட்டத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவை ஒத்திவைக்கப்பட்டதை அனைவரும் பார்த்து கொண்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். “நேற்று மக்களவையில் விலைவாசி விவாதம் நடந்தபோது, பணவீக்கம் என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்று அரசாங்கம் தெளிவாகச் கூறுகிறது.  – கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி டுவிட் நாடு வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து கொண்டிருக்கும் போது பல குடும்பங்கள் நிலையான வருமானத்திற்கு வழியில்லாமல் இருக்கின்றன. இந்தநிலையில் “திமிர் பிடித்த ராஜா” (மோடியை மறைமுகமாக சாடினார்) என்ற பிம்பத்தை மெருகூட்டுவதற்காகவே அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நீங்கள் தனியாக போராட வேண்டாம், உங்களின் குரல் தான் காங்கிரஸ். நீங்கள் தான் காங்கிரசின் வலிமை. மக்களின் குரலை நசுக்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸ் போராடும். உங்களுக்காக, நானும், காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறோம், தொடர்ந்து போராடுவோம். இன்று நாட்டில் எந்தெந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஏனெனில் அரசின் ஒவ்வொரு தவறான கொள்கையும் உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது. ” சொல்வதையெல்லாம் நீங்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அவர்களுக்கு பயந்து சர்வாதிகாரத்தை அனுபவிக்கத் தேவையில்லை, அவர்கள் கோழைகள், உங்கள் வலிமைக்கும் ஒற்றுமைக்கும் பயப்படுகிறார்கள், அதனால்தான் அவர்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள். நீங்கள் அவர்களை ஒற்றுமையாக எதிர்கொண்டால், அவர்கள் பயப்படுவார்கள்” என்றார்.
நாடு வேலையில்லா திண்டாட்டத்துடன் போராடுகிறது  - ராகுல்காந்தி குற்றச்சாட்டுகடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி டுவிட்

Related Articles

Back to top button
Close
Close