fbpx
Others

ராகுல்காந்தி ; இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டம்

 உக்ரைனின் உள்நாட்டு பிரச்னைகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது போல், இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா காத்துக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அச்சம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடன் மேற்கொண்ட உரையாடலின் போது இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றமைக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துக்கொண்டார்.  லடாக் எல்லையில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டுள்ளது என்று கூறிய ராகுல், இதை பிரதமர் மோடி மறுத்து வருவதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடியின் மறுப்பால் எல்லை தொடர்பான பேச்சு வார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார். நேட்டோ படையுடன் சேர துடிக்கும் உக்ரைனை ரஷ்யா தாக்கி வருவது போல், ஒரு உள்நாட்டு பிரச்னையை பயன்படுத்தி சீனாவும் தாக்க காத்து கொண்டிருப்பதாக ராகுல் காந்தி அச்சம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை வெகுவாக புகழ்ந்த ராகுல்காந்தி, மற்ற மாநில மக்களை விட தமிழர்கள் செலுத்தும் அன்பு வித்தியாசமானது என்றார். தமிழர்கள் ஏன் இத்தனை உணர்வு பூர்வமாகவும், ஆர்வமாகவும் அன்பு செலுத்துகின்றனர் என்று தான் ஒவ்வொரு முறையும் வியந்ததாக ராகுல்காந்தி சிலிர்ப்புடன் தெரிவித்தார். தமிழர்களின் மொழி பற்று குறித்தும் ராகுல் காந்தி வியந்து குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close