fbpx
Others

யாராவதுமகளிர் உரிமைத் தொகையைநிறுத்த முற்பட்டால்—நிதியமைச்சர்..

மொழி உரிமையை விட்டுக் கொடுத்தால் தான் ஒன்றிய அரசின் நிதியா? அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்!தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார்.அதில்,”அனைத்துசாதியினரும்அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி பதவியேற்ற உடன் முறையாக பயிற்சி பெற்ற 23 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிமாடல் ஆட்சி.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. நமது முதலமைச்சர் ஆட்சியில் மகளிர் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சி. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகம் ஆக உள்ளது. பள்ளி குழந்தைகள் பசியின்றி பயில அறிமுகம்செய்யப்பட்டதிட்டம்தான்காலைஉணவுத்திட்டம்.பெற்றோர்இழந்தகுழந்தைகளை  அரவணைத்துபாதுகாக்கஅன்புக்கரங்கள்திட்டம்செயல்படுத்தப்படுகிறது.பெயர் என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேர். பெயர்களை சூட்டுவதிலும் பெயரை மாற்றுவதிலும் தமிழ்நாடு அரசு உயர்ந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள தமிழர்களும் பயன்பெறும் வகையில் அயலக தமிழர் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழ்நாடுபோட்டியிடுகிறது; மற்ற மாநிலங்களோடு அல்ல. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன்தான் நாம் போட்டி போடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close