fbpx
Others

ம.தி.மு.க. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ…?

*தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்.!* 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர். அதனை, படம் பிடித்த செய்தியாளர்களை பார்த்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேடையில் இருந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அங்கிருந்த தொண்டர்களிடம் செய்தியாளர்களின் ஒளிப்பதிவு கருவிகளை பறிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ம.தி.மு.க தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனத்தைதெரிவித்துக்கொள்கிறது.செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக தொண்டர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோவின் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.எஸ்.சரவணன்
எஸ்.சரவணன் தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

Related Articles

Back to top button
Close
Close