fbpx
Others

மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்…..B.J.P.ல்…பதவி…!

காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சில நாள்களுக்கு முன் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பாக கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் மோசமான நிலைக்கு ராகுல் காந்தி தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.அவர் தனது கடிதத்தில், “கடந்த 2013 ஜனவரியில் ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். அன்று முதல், கட்சியில் முன்பிருந்த ஆலோசனை கூறும் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது. கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். அனுபவமில்லாத, உதவியாளர் நிலையில் இருக்கக்கூடியவர்கள் கட்சியை நடத்த தொடங்கினார்கள். 2 மக்களவை தேர்தல் தோல்வி, மாநில தேர்தல்களில் ஆட்சியமைக்க முடியாதது உள்பட காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம்” என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.ராகுல் காந்தியை விமர்சித்த நிலையில், தற்போது பிரதமர் மோடியை பாரட்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். தனது ராஜினாமாவுக்குப் பின் ஊடகத்திற்கு அளித்த முதல் பேட்டியில் பிரதமர் மோடி குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத் கூறியதாவது, “பிரதமர் மோடி குடும்பம், குழந்தைகள் இல்லாதவர் என்பதால் அவரை முரட்டுத்தனமானவர் என்று கருதினேன். ஆனால், அவர் மனிதாபிமானம் படைத்த மனம் கொண்டவர் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். 2007ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக நான் இருந்த போது காஷ்மீர் சுற்றுலா வந்த குஜராத் மாநில பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் உயிரிழப்பும் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. இந்த நிகழ்வை பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து மாநிலங்களவையில் நடைபெற்ற எனது பிரிவு உபசார விழாவின் போது பிரதமர் நினைவு கூர்ந்து உணர்ச்சி வசத்துடன் கண்ணீர் மல்க பேசினார். நானும் கண்ணீர் வடித்தேன். அவரது பேச்சை காங்கிரசார் அறியாமையுடன் திரித்து பேசுகின்றனர்.” இவ்வாறு ஆசாத் பிரதம் மோடி குறித்து கூறினார்.  குலாம் நபி ஆசாத் க்கு முக்கியபதவி உள்ளது…B.J.P.ல்

Related Articles

Back to top button
Close
Close