fbpx
Others

மேகாலயா மாநிலத்தில்பாஜகவுக்கு பின்னடைவு…..

: மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மேகாலயாவில் பலமுனைப் போட்டி நிலவி வந்தது. இங்கு ஆளும் தேசிய மக்கள் கட்சியை (என்பிபி) எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) கட்சிகள் போட்டியிடுகின்றன. இங்கு காங்கிரஸ், பாஜ கட்சிகள் 59 தொகுதிகளிலும், என்பிபி 56 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 57 தொகுதிகளிலும் யுடிபி கட்சி 46 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, தேசிய மக்கள் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 12 இடங்களிலும் திரிணாமுல் 10 இடங்களிலும் பிற கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன..

.

.

Related Articles

Back to top button
Close
Close