fbpx
Others

மு.க.ஸ்டாலின்-புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த அதீத கனமழை காரணமாக மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அதன்படி, புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி அறிவித்திருந்தார். இதற்கென தமிழ்நாடு அரசால் ரூ.1,486 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெற உள்ளனர். முன்னதாக நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன்களை நியாயவிலை கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக வழங்கப்பட்டன.நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் விதமாக, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடை அருகே ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிவாரணத் தொகையை பெற்றுக் கொண்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், நியாய விலை கடைக்கு அருகில் உள்ள குறைதீர் விண்ணப்பங்கள் பெறுதல் மையம் மற்றும் உதவி மையத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் அசன் மௌலானா, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* மேடையில் இருந்து இறங்கி சென்று முதியோருக்கு வழங்கிய முதல்வர்வேளச்சேரியில் புயல் நிவாரணத்தொகையை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு புதிய பனிரெண்டு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கினார். மேலும், மேடை ஏற முடியாமல் கீழே அமர்ந்திருந்த முதியோருக்கு முதல்வரே மேடையை விட்டு இறங்கி வந்து நிவாரண தொகையை வழங்கினார்.  * நிவாரணம் பெற்றவுடன் எஸ்எம்எஸ்வெள்ள நிவாரணத் தொகை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று குடும்ப அட்டையை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நிவாரண தொகை வாங்கிய குடும்ப அட்டைதார்களின் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. மேலும், டோக்கன் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டையில்லாத நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளிலேயே அதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. அதனைபெற்றுபூர்த்திசெய்துசமர்ப்பிக்கும்படிஏற்கனவேதெரிவிக்கப்பட்டுள்ளது.

* 24,25,000 குடும்பங்கள் பயன்தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6,000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1,486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்.

* கர்ப்பிணி, முதியோருக்கு முன்னுரிமை
ரேஷன் கடைகளில் புயல் நிவாரணத் தொகை தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.* புகார் தெரிவிக்க இலவச எண்கள்பொதுமக்கள் நிவாரண தொகை தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்க சென்னை எழிலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-2859 2828 மற்றும் 1100 கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close