மு.க.ஸ்டாலின்–பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை…
சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும்மிகநெருக்கமானநண்பர்களாகஇருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல் செய்ததன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரியதலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் லாலு பிரசாத்.ராகுல் காந்தி, ஜேதஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தை காக்க, மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள்.
உங்கள் இருவரின் நட்பு அரசியலைக் கடந்து உடன்பிறப்புகள் போன்றது. பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரப்போவது இந்த நட்புதான்.பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது; அதனால்தான் பாஜக தடுக்க முயற்சிக்கிறது.65 லட்சம் வாக்காளர்களை சொந்த மண்ணின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதம் தவிர வேறு எதுவும் இல்லை.பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம்ஆடுகிறது.தேர்தல்ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல்கூறுகிறார்..தேர்தல்ஆணையத்தின் இந்த மிரட்டல்களுக்கு ராகுல் காந்தி பயப்படமாட்டார். ராகுலின் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட தேர்தல் ஆணையத்தால்பதில் சொல்ல முடியவில்லை. ராகுல் காந்தியின் வார்த்தையிலும்,
பார்வையிலும்எப்போதும்பயம்இருக்காது.இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி உள்ளார். உங்களால்இந்தியமக்களுக்குநீதிகிடைக்கும்.400இடங்கள்எனகனவுகண்டபாஜகவை240இடங்களில்அடக்கியதுஇந்தியாகூட்டணிதான். மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகின்றனர்.மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும்.கடந்த ஒரு மாத காலமாகஇந்தியாவே பீகாரைத்தான்பார்த்துக்கொண்டிருக்கிறது.இதுதான்ராகுல்காந்தியின்பலம்ஆகும்.இதுதான்தேஜஸ்வியின் பலம் ஆகும்.இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதை எதிர்த்து பீகார் போர்க்குரலை எழுப்பியிருக்கிறது என்பதுதான் வரலாறுஆகும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்கூறினார்.