முன்னாள் மாணவர்களின் சங்கமம் !!! தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி.


தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் உள்ள தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1970 முதல் 1978 வரை (SSLC 11-ம் வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு) பயின்ற முன்னாள் மாணவர்களின் சங்கமம் !!! தேனி மாவட்டம், தேனியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் இன்று
06.01.2025-திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், திரு. T.ராஜமோகன், B.Sc.,தலைவர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை அவர்கள் தலைமையில்,முன்னிலை – திரு. P.P.கணேஷ், B.Sc., அவர்கள், உபதலைவர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை, தேனிவரவேற்புரை மற்றும் வாழ்த்துரை
திரு. M.ஆனந்தவேல், B.B.A., அவர்கள். பொதுச்செயலாவதேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை, தேனி.திரு. M.பழனியப்பன் அவர்கள். பொருளாளர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தேனி,
திரு. K.P.R.முருகன்., B.B.A., B.0.6, Luchofia Gest திரு. G.K.விஜயகுமார் அவர்கள்,
பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் திரு. K.தாளமுத்து அவர்கள்,திரு. R.பச்சையப்பன் அவர்கள்,
திரு. M.பாலு அவர்கள்,திரு. T.ஜோசப்ராஜ் அவர்கள்,திரு. S.முருகேசன் அவர்கள்,
திரு. R.பரமசிவம் அவர்கள்,திரு. K.சுப்புராம் அவர்கள்.திரு. R.ராம்தாஸ் அவர்கள்,
திரு. G.செல்லத்துரை அவர்கள்.திரு. L.பரமசிவம் அவர்கள்,திரு. S.குமரகுரு அவர்கள்,
திரு. A.ஆறுமுகச்சாமி அவர்கள், அனைவரும் கலந்து கொள்ள, மேல்நிலைப்பள்ளியில் 1970 முதல் 1978 வரை (SSLC 11-ம் வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு) வரை பயின்ற மாணவர்கள் பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள கல்விக் கண் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்பு இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு நினைவு பரிசினை வழங்கியும், தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர், தாங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவித்து சால்வை களையும் நினைவுப்பரிசு களையும் வழங்கி ஆசிரியர்களிடம் ஆசிர்வாதங்களை பெற்றும், தான் பயின்ற ஆசிரியர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளும், தாங்கள் பயின்ற பள்ளியில் கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒவ்வொரு நகர்வுகளையும் நினைவு கூர்ந்து ம், இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய மாணவர்களும், ஒருவருக்கொருவர் தங்களது கடந்த 46 ஆண்டுகள் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்…… மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ நண்பர்களுக்கும் எலைட் 77 – 78 க்கான நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன….. இறுதியில் நன்றியுரையுடன் பள்ளியின் நிர்வாகம் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது….. அனைத்து ஆசிரியர்களின் நல்லாசிகளுடன் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது…ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி
