fbpx
Others

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி .

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி ஆகியோர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் நாளை காலை டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 8.30 மணி முதல் 9.30 வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து 9.30 மணி அளவில் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close