fbpx
Others

முதல்-மந்திரி கெலாட்–ராஜஸ்தானில்19 புதிய மாவட்டங்கள்அறிவிப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்-மந்திரி கெலாட் 19 புதிய மாவட்டங்களை அறிவித்து உள்ளார். இதன்படி, தலைநகர் ஜெய்ப்பூர் நான்கு சிறிய மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. அவை ஜெய்ப்பூர் வடக்கு, ஜெய்ப்பூர் தெற்கு மற்றும் டுடு ஆகும். ஜெய்ப்பூரின் ஒரு பகுதியாக இருக்கும்ராஜஸ்தானில் 19 புதிய மாவட்டங்கள்: முதல்-மந்திரி அறிவிப்பு; வசுந்தரா ராஜே எதிர்ப்பு கொத்புத்லி, ஆல்வாரில் உள்ள பெஹ்ரோர் நகருடன் இணைக்கப்பட்டு மற்றொரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இந்த அறிவிப்பால், மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும். இதற்காக உயர் மட்ட குழு ஒன்று ஆய்வு செய்து, முதல்-மந்திரியிடம் அளித்த இறுதி அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கெலாட்டின் அரசு, நீர்ப்பாசன திறன் மற்றும் நீர் வீணாவது தடுக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்காக அரசு ரூ.37 கோடிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. உதய்ப்பூர் மாவட்டத்தின் 367 கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்காக அரசு ரூ.326.13 கோடி செலவிட உள்ளது. ராஜஸ்தானின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நோக்கத்துடன் இந்த புதிய மாவட்டங்கள் அறிவிப்பு மற்றும் பல்வேறு திட்ட பணிகள் அமல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது. எனினும், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே கூறும்போது, தனிப்பட்ட அரசியல் சுய நலன்களுக்கான முயற்சியிது. புதிய மாவட்டங்கள் விசயத்தில் பல்வேறு முக்கிய உண்மைகளை உற்று நோக்க வேண்டும். பொதுமக்களுக்கு வசதிகளை செய்வதற்கு பதிலாக, இந்த புதிய மாவட்டங்களால் நிர்வாக ரீதியாக பல சோதனைகளை மக்கள் சந்திக்க வேண்டி வரும் என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close