fbpx
Others

முதல் இந்து கோயிலைஐக்கிய அரபு அமீரகத்தில்பிரதமர் மோடிதிறந்து வைத்தார்.

அபுதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து துபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.இந்நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார். கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு நிறுவப்பட்டுள்ள கடவுள் சுவாமி நாராயணன் சிலைக்கு பூஜை செய்தார்.

Related Articles

Back to top button
Close
Close