fbpx
Others

முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சவால் …..?

ADMK vs DMK election : 200 தொகுதி வெற்றி கனவை தகர்ப்போம்... அதிமுக 210 இடங்களில் வெல்லும்.! ஸ்டாலினுக்கு சவால் விடும் எடப்பாடி | Eps Confident That Aiadmk Will Win 210 ...என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடையில் விவாதிக்க தயாரா என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சவால் விடுத்துள்ளார்
நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது இதில் ஐந்து சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா அவர்களால் சொல்ல முடியுமா இது என்னுடைய ஓபன் சேலஞ்ச் தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும் ‘ என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார் இதற்கு பதில் அளித்து இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதல்வரே நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?   நீங்கள் நின்று பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும் , அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று . அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே தொண்ணூற்றைந்து சதவீதம் வேலையாகக் கொண்ட நீங்கள் ஐந்து சதவீதம் திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா ? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை , பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு , எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள் , நர்சுகள் , அரசு ஊழியர்கள் , மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு , Collarஐ தூக்கி விட்டு பேசுகிறீர்களே . உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?  இருபது லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா ? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்ததுதேர்தல் பயத்தில் , நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா ? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில் , அதே AI சந்தாவை ஆறு மாதத்திற்கு   மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு . இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்
முதல்வர்ஸ்டாலின் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது , நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல் . இதேபோல் , நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா ? ( கவலை வேண்டாம் .   மூச்சு இரைக்கவாய்ப்பே இல்லை ! ) அப்புறம் . . . ஏதோ Open challenge என்று சொன்னீர்களே   பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pendingல் இருக்கிறது. என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா ? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார் . திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா ? ஓபன் சேலஞ்சுக்கு பிறகு முதல் கேள்வி நீட் ரத்து என்னாச்சு ? இவ்வாறு   இபிஎஸ்    கூறியுள்ளார் . தினமலர் இணையதளம்செய்தி…. நன்றி .

Related Articles

Back to top button
Close
Close