fbpx
Others

முதல்வர் மு.க. ஸ்டாலின்–ராகுல் காந்திதகுதிநீக்கம்நடவடிக்கைக்குகடுமையான கண்டனம்

  •  2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்த்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமைப் பயணம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தகுதி நீக்கத்திற்கு ஒரு காரணம் என்று முதல்வர மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
    அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த தகுதி நிக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது. ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மேல்முறையீடு செய்வது என்பது அடிப்படை உரிமை அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது எம்.பி.யின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close