fbpx
Others

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி….?

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேற்று ஒரு நாள் உற்பத்திநிறுத்தத்தில்ஈடுபட்டன.தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையில் இருந்து தங்களை மீட்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில் துறை மின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை மின்சார பயன்பாட்டில் கிலோ வாட்டுக்கான கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.154ஆக உயர்த்தப்பட்டது. மேலும், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்பு கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டண சுமையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மீண்டு வர முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.இதனால், 430 சதவீத உயர்த்திய நிலைக்கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். 3பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்டண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வோர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை (பல ஆண்டு கட்டணம்) உடனடியாக ரத்து செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.எல்டி கட்டணமுறையில்மின்சாரம்பயன்படுத்துபவர்களுக்கு  தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4ம் கட்டமாக நேற்று (25ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக கடந்த 3 நாள்களுக்கு முன் அறிவித்திருந்தனர்.அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களான ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கான்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நேற்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டன.இதுகுறித்து, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கார்த்திகேயன் கூறுகையில்,“தமிழ்நாடு முழுவதும் 3.37 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.இதில், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நேற்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இதனால், சுமார் ரூ.300 முதல் ரூ.500 கோடி வரையிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர 2 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close