காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருதுவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கர்நாடகஅணைகளில்திறந்துவிடப்படும்உபரிநீரால்,தர்மபுரிமாவட்டம்,ஒகேனக்கல்காவிரிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணை முழுதுமாக நிரம்பியதால், அணைக்குவரும்70ஆயிரம்கனஅடிஉபரிநீர்வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் – இடைப்பாடி சாலை மூழ்கி, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும்ஈரோடு மாவட்ட காவிரிக் கரையை ஒட்டிய நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பவானி உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளை காவிரி ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இந்நிலையில் காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக கடந்த 2ம் தேதி 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும், தொடர்ந்து, 50 மருத்துவ முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் இங்கு, சளி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு தேவைக்கேற்ப மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 1056 பேர், ஈரோடு மாவட்டத்தில் 317 பேர், கடலூர் மாவட்டத்தில் 53 பேர், கரூர் மாவட்டத்தில் 30 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 பேர், தர்மபுரி மாவட்டத்தில் 35 பேர் என மொத்தம் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய்கள் இருப்பின் மருத்துவ ஆலோசனையும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனையும், தொடர் சிகிச்சையும் வழங்கப்படும். வீணாகும் காவிரி நீர்.. இந்த தண்ணீரை வைத்து இத்தனை திட்டங்களை செயல்படுத்தலாம்! ரமணா ஸ்டைலில் அன்புமணி இதற்காக பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் பொட்டலங்கள் உரிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பின் போது ஏற்படக்கூடிய காயங்கள், விஷக்கடி, பாம்பு கடி போன்ற நிகழ்வுகளுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 108 அவசர ஊர்தி வாகனங்களும் மாவட்டம் தோறும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் வெள்ள பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை: * சுத்தம் பேணுதல் – கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் * கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும் * இணைநோய் உள்ளவர்கள் வேலைக்கு மருந்துகளை உட்கொள்ளவதுடன், சரியான அளவு உணவை உட்கொள்ள வேண்டும் * குழந்தைகளை வெள்ள நீரில் அல்லது அருகில் விளையாட அனுமதிக்காதீர்கள் * கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு, மலேரியாவை தடுக்க கொசு வலைகளை பயன்படுத்தவும் வெள்ள நேரங்களில் செய்யக்கூடாதவை: * வதந்திகளால் தவறாக வழிநடத்தப்படுவதை தவிர்க்கவும் * மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கும் வரை தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் * பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையினரால் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று உடல் உபாதைகளான காய்ச்சல், சிறுகாயங்கள், வெட்டு காயங்கள், சளி, இருமல், தும்மல், கை கால் வலி போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்து கொண்டு பயன்பெறலாம்.” என கூறியுள்ளார்.