மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி–அமெரிக்க அதிபரின் அராஜகப்போக்கை கண்டித்துகண்டன கோஷம்..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபரின் அராஜகப்போக்கை கண்டித்தும்,வெனிசுலா அதிபர் நிக்கோலோஸ் மதுராவை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் அருள் தலைமை தாங்கினார்.இதில்,மாவட்ட செயற்குழு டி.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ்,வட்டச் செயலாளர்என்.கங்காதரன்,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பெ.ரவி,மாவட்டக் குழு உறுப்பினர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமெரிக்கா அதிபருக்கு எதிராகவும், அமெரிக்காவின் செயலை கண்டிக்க தவறிய மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன உரையாற்றி பேசினார்.இதன் பின்னர்,கண்டன கோஷம் எழுப்பினர்.