Others
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதோழர் வி எஸ் அச்சுதானந்தன்மறைவு இரங்கல் அஞ்சலி..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில முன்னாள் செயலாளரும், கட்சியின் தலைமை குழு உறுப்பினரும், கேரளாவின் முன்னாள் மாநில முதல்வருமான தோழர் வி எஸ் அச்சுதானந்தன் அவர்களின் மறைவையொட்டி, அவருக்கு நீடாமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் இரங்கல் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ராதா, மாவட்ட குழு உறுப்பினர் வி எஸ் கலியபெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அண்ணாதுரை, காளியப்பன், முருகேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இரங்கல் அஞ்சலி செலுத்தினர்.