fbpx
Others

மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அமைச்சர்

ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதுசேலம் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை (திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாடுகள் ) நெறிமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,  ” அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில்  இரண்டாவது  பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 34-ஆவதாக ‘‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’’  இடம் பெற்றுள்ளது. இதில்,  மாநில அரசுகள் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. அதற்கேற்ப, இணைய வழியில் கிடைக்கும் சூதாட்டங்களுக்கும்  பல்வேறு மாநில அரசுகள் சட்டமியற்றி தடை விதித்துள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும், அவர் தனது பதிலில், திறன் சார்ந்த விளையாட்டுக்கும்,  அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற அறிவிப்புகள் உள்ளன.  ஒரு குறிப்பிட்ட கணிசமான அறிவைக் கொண்டு வெற்றி பெற முடியும் விளையாட்டுகள் எல்லாம் திறன் சார்ந்த விளையாட்டு என்று இந்திய உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.  அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாட்டுகள் அனைத்தும் இந்திய சட்டத்தின் படி சூதாடுதலாக கொள்ளப்படும் ” என்றும் தெரிவித்தார்.முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு  சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இந்த தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர், மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு முழுமையான அதிகாரம் இல்லை என்று காரணத்தினால் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்நிலையில், அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாட்டுகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்த கேள்விக்கு,  ‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’ மாநில அரசுகளின் வரம்பிற்குள் வருகின்றன, பல்வேறு மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து வருகின்றன என்றவாறு பதில் அளித்துள்ளார் .

Related Articles

Back to top button
Close
Close