fbpx
Others

செங்குன்றம்—ஆவடி காவல் ஆணையரகம்கலந்தாய்வு கூட்டம்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் – காவல்துறை கலந்தாய்வு கூட்டம்
செங்குன்றத்தில் நடந்தது!

செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சியில் அமைந்துள்ள அருள் அரசன் பேலஸ் திருமண மண்டபத்தில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் – காவல்துறை கலந்தாய்வு கூட்டத்திற்கு ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஐபிஎஸ் தலைமை தாங்கினார்செங்குன்றம் காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கருத்துரை வழங்கினர்.இந்த கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பேரூராட்சி – ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், குடியிருப்போர் – பொதுநலச் சங்கம், சமூக நல ஆர்வலர்கள், லயன்ஸ் சங்கம், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பஜார் சாலையில் நடைபெறும் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்கவும் பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கனரக வாகன போக்குவரத்தை தடை செய்யவும் பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றவும் லாரிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு புழல் ஏரிக்கரை ஓரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும் எனவும். கோரிக்கை வைத்தனர்.காவல் ஆணையர் கே.சங்கர் தன்னுடைய ஏற்புரையில், மக்கள் கூறிய குறைகளையும் கருத்துகளையும் குறிப்பெடுத்து ஒவ்வொரு விஷயத்திற்கும் தீர்வு காணப்படும் என்றார்.போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மலைச்சாமி, செங்குன்றம் காவல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன், குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி, போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ், தமிழ்நாடு நெல்அரிச வணிகர் சங்க தலைவர் டி.துளசிங்கம், புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்றத் தலைவர் கு.தமிழரசி குமார், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புள்ளிலைன் தமிழ்செல்வி ரமேஷ், தீர்த்தம்கிரியம்பட்டு கவிதா டேவிட்சன், சென்றம்பாக்கம் ராமு, வடகரை நா.ஜானகிராமன், ஆத்தூர் சற்குணம், பெருங்காவூர் ஸ்வீட்டி கோபி, புதிய எருமைவெட்டி பாளையம் ஸ்ரீதர், பழைய எருமை வெட்டி பாளையம் வெங்கட்ராமன்,நெல் அரிசி வணிகர் சங்கத் தலைவர் டி.கோபி, வியாபாரி சங்க நிர்வாகிகள் வில்லியம்ஸ், பி.கோதண்டபாணி, எஸ்.எல். இருதயம், ஆர்.செல்வக்குமார், முகம்மது காசிம், மாரியப்பன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கே.ஆர். ரமேஷ், வினோதினி பாலாஜி, என்.ராதாகிருஷ்ணன், என்எம்டி. இளங்கோவன், கே.கே.ராமன், பாடியநல்லூர் ஊராட்சி 14வது வார்டு உறுப்பினர் கே.ராஜவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close