fbpx
Others

மலைவாழ் மக்களுக்கு நடமாடும் மருத்துவமனை மூலம்இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு | Coimbatore District In Tamil

கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், வனத்துறை அலுவலக வளாகத்தில் சத்ய சாயி சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி, கோட்டூர் சமிதி உறுப்பினர்கள் ஏற்பாட்டில், ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறையினர் ஒத்துழைப்புடன்டாப்சிலிப்,கோழிக்கமுத்தி, எருமைப்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு சத்ய சாயி மொபைல் மருத்துவமனைமுலம்மருத்துவமுகாம்நடைபெற்றது. இதில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைவாழ் மக்களை அவர்களின்இருப்பிடத்திற்கே சென்று சிற்றுந்து மூலம் முகாமிற்கு அழைத்து வந்து, மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மீண்டும் அவர்களை இருப்பிடத்திற்கே சேவாதள தன்னார்வலர்கள் அழைத்துச் சென்றனர். இந்த முகாமில் இரத்தம், சர்க்கரை, கண் பரிசோதனைகள், மற்றும் ஹிமோ குளோபின்,Mobile Hospital on Wheels | JCBL Limited ஈசிஜி, எக்ஸ்ரே, ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள்மற்றும்ஆலோசனைகள்வழங்கப்பட்டன. மேலும் இதில் தேர்வு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஆல்வா மருத்துவமனை, மற்றும் கோவை ராம் நகர் பொன்னம்மாள் கண்மருத்துவமனை மருத்துவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான சேவாதள தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த சத்ய சாயி நடமாடும் மருத்துவ பேருந்து கோவையில் பல்வேறு இடங்களில் இலவசமாக மருத்தவ முகாம்களை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close