மனிதர்களை அழிக்க வரும் விண்கல்…! விஞ்ஞானிகள் வார்னிங்…
‘2025 PM2’ என்ற விண்கல் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில், அதாவது 2.31 மில்லியன் மைல் தொலைவில், கடந்து செல்லும் என்று நாசா எச்சரித்திருக்கிறது.2.31 மில்லியன் மைல் தொலைவு என்பது அதிகமாக தோன்றலாம். ஆனால், இது செவ்வாய் கிரகத்தை விட நெருக்கமான தொலைவாகும். நிலவு பூமியிலிருந்து சுமார் 238,900 மைல் தொலைவில் உள்ளது. இந்த விண்கல் சந்திரனின் தூரத்தை விட பத்து மடங்கு அதிகமான தொலைவில் இருக்கிறது.இந்த விண்கல் சுமார் 190 அடி அகலம் கொண்டது,மேலும்மணிக்கு41,390மைல்வேகத்தில்பயணிக்கிறது.இவ்வளவுவேகத்தில்பயணித்தாலும், இது பூமிக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்பதால், இது ஒரு முக்கியமான ஆய்வுக்குரியபொருளாகவேகருதப்படுகிறது.இந்தவிண்கல்கடந்துசெல்லும்போதுபூமிக்குஎந்தஅச்சுறுத்தலும்இல்லைஎன்றுவல்லுநர்கள்உறுதிப்படுத்தியுள்ளனர். டைனோசர்கள் கூட இதுபோன்ற ஒரு விண்கல் மோதித்தான் அழிந்து போனது. இந்த விண்கல் மோதினால் கணிசமான அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால் நல்வாய்ப்பாக இந்த விண்கல் நம்மீது மோதாது ஒரு விண்கல்லை “அபாயகரமானது” என வகைப்படுத்த இரண்டு நிபந்தனைகளை நாசா நிர்ணயித்துள்ளது. ஒன்று விண்கல் பூமிக்கு 7.4மில்லியன்கிலோமீட்டர் தூரத்திற்குள் கடந்து செல்ல வேண்டும். இரண்டாவதாக விண்கல் 85 மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்டதாக இருக்க வேண்டும். 2025 PM2 எனும் விண்கல் இரண்டாவதுநிபந்தனையை பூர்த்திசெய்திருந்தாலும்அதுபூமிக்குபோதுமானதூரத்திற்குள்வரவில்லை.இந்த விண்கல் குறித்து ஆய்வாளர்க்ள கூறுகையில், ஏதென் விண்மீல் குழுவிலிருந்த இந்த விண்கல் வந்திருப்பதாகதெரிவித்திருக்கின்றனர்.இவைபூமியின்சுற்றுப்பாதையைகடக்கும்தன்மைகொண்டவை,ஆனால்பொதுவாகநிலையான பாதைகளைபராமரிக்கின்றன.இந்த விண்கல் பாதுகாப்பானதாககடந்துசென்றாலும்,விஞ்ஞானிகள்இதைதொடர்ந்துகண்காணிக்கிறார்கள். ஈர்ப்புவிசைகாரணமாகவோ,பிறவிண்வெளிப்பொருட்களுடன்மோதல்போன்ற காரணமாகவோ இந்த விண்கல் பாதையை மாற்றலாம். அப்படி மாறினால் அது பூமிக்கு ஆபத்தானதாக மாற்றும். எனவேதான் அதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2025 PM2 மட்டுமின்றி, பல சிறிய விண்கற்களும் சமீப நாட்களில் பூமியைக் கடந்து சென்றுள்ளன. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் 2023 PX என்ற 73 அடி விண்கல் ஆகஸ்ட் 22 அன்று 577,000 மைல் தூரத்திற்குள் கடந்து சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 2025 QY மற்றும் 2025 QE2 என்ற 45 மற்றும் 110 அடி அளவிலான இரண்டு விண்கற்களும் அதிக தூரங்களில் இருந்து பூமிக்கு அருகாமையில் வந்து சென்றன. பெரிய விண்கற்கள் அரிதானவை, ஆனால் மிகவும் ஆபத்தானவை. சுமார் 160 அடி அளவிலான விண்கல் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கி அழிவை ஏற்படுத்தலாம். 500 அடி மற்றும் அதற்கும் அதிகமான சைஸ் கொண்டவிண்கற்கள் நகரங்கள் அல்லது மாநிலங்கள் முழுவதும் சேதத்தை ஏற்படுத்தலாம், இருப்பினும் இத்தகைய தாக்கங்கள் 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கின்றன.3,000 அடிக்கு மேல் உள்ள விண்கற்கள் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தலாம், இது 700,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆறு மைல்களுக்கும் அதிகமான பெரிய விண்கற்கள் பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்தும், இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கும் என்று கருதப்படுகிறது.