மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவமேம்பாலம் – முதல்வர் ஸ்டாலின் திறப்பு ..
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக ஆளுநர் மாளிகையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் சாலை உள்ளது. கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன.அதேபோல, வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால், இந்த பகுதி எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக இருக்கும். பீக் நேரத்தில் சிக்னல்களை தாண்டுவதற்கு மட்டுமே மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியிருக்கும். வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்வதற்குள் சிக்னல்கள் இரண்டு முறை மூன்று வரை விழுந்து விடும். அந்த அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யபட்டது. சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் வகையில் எல் வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் தற்போது முடிவு பெற்றுள்ளதால் இன்று சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த பாலம் திறக்கப்படுவதால், ஐஐடி மெட்ராஸ் – அடையார் புற்று நோய் மருத்துவமனை வரையில் உள்ள சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.இந்தப்பாலம்இருவழித்தடத்தில்வாகனத்தில்செல்லும்அளவிற்குஅகலமானதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பாலத்தின்மொத்தநீளம்652மீட்டர்ஆகும்சர்தார்பட்டேல்சாலையிலிருந்துராஜீவ்காந்திசாலைக்குப்பிரிந்துசெல்லும்இடத்தில்பாலம்வளைவாகஅமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 650 மீட்டர் நீளம், 9.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். ஐஐடி மார்க்கத்தில் இருந்து ஒ எம்.ஆர் செல்லக்கூடியவர்கள் மட்டுமே இந்த மேம்பாலத்தை பயன்படுத்த முடியும். எதிர்திசையில் இந்த மேம்பாலத்தில் பயணிக்க முடியாது. அதாவது, ஒஎம்.ஆர். சாலையில் இருந்து கிண்டி நோக்கி பயணிப்பவர்கள் மேம்பாலத்தை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே உள்ள பழைய சாலையில் பாலத்தின் கீழ்தான் பயணிக்க வேண்டியிருக்கும்.அதே நேரத்தில் ஒஎம்.ஆர் சாலையில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு, திருவான்மியூர் செல்ல வேண்டும் என்றால் மேம்பாலத்திற்கு கீழாகவே ஒரு யூடர்ன் உள்ளது. அவற்றின் வழியாக அடையாறு, திருவான்மியூர் பகுதிக்கு செல்ல முடியும். முதல்வர் ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட இருக்கும் இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கைலாஷ் பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக முழுவீச்சில்பணிகள்நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவு பெற்று திறக்கப்பட உள்ளது. பாலம்கட்டுமான பணிகளால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு வெகுவாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.