fbpx
Others

மத்திய உள்துறை இன்றுபுதிய அறிவிப்பு-‛வந்தே மாதரம்’ மற்றும் ‛தேசிய கீதம்’…

இ - மெயில்களும் ஹிந்தியில் தான்: உள்துறை அமைச்சகம் அடுத்த அதிரடி‛வந்தே மாதரம்’ மற்றும் ‛தேசிய கீதம்’ ஆகிய இரண்டுமே சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டுப்பற்று உணர்வை தூண்டிய பாடல்களாகும். சுதந்திரத்துக்கு முன்பே பிறந்த இந்த பாடல்கள் இன்றும் நம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஒருதனிஇடத்தைப்பிடித்துள்ளன. இருப்பினும் ‛ஜன கண மன’ என தொடங்கும் பாடல் தேசியகீதம் ஆனது.ஆனால் விடுதலைப் போராட்ட வீரர்களை எழுச்சியூட்டிய ‘வந்தே மாதரம்’ பாடல் தேச பாடலாக மாறியது. அதுமட்டுமின்றி அந்த பாடலின் 4 பத்திகள் நீக்கப்பட்டன.இந்நிலையில்தான்இன்றுமத்தியஅரசுபுதியஉத்தரவைபிறப்பித்தது.இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛அனைத்து அரசு நிகழ்வுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாகதேசியபாடலான’வந்தேமாதரம்’இசைக்கப்படவேண்டும்.‛வந்தேமாதரம்’பாடல்இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.‛வந்தே மாதரம்’ பாடல் தொடர்பாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் கருத்து மோதல் நடந்தது. தற்போது ‛வந்தே மாதரம்’ பாடலை அனைத்து அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சியில் பாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். 1) வழிமுறைகள் என்னென்ன?  அரசு நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்ச்சிகளில் தேசியகீதத்துக்கு முன்பாக ‛தேச பாடலான’ வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். * தேசியகீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பது போல் வந்தேமாதரம் பாடலுக்கும் அனைவரும் எழுந்து மரியாதை கொடுக்க வேண்டும். * வந்தே மாதரம் பாடலை முழுமையாக நீக்கப்பட்ட 4 பத்திகளுடன் சேர்ந்து இசைக்க வேண்டும். * வந்தே மாதரம் பாடலை 190 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2) இந்த ‘வந்தே மாதரம்’ பாடலை பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875ஆம் ஆண்டு எழுதினார். அவரது பிரபலமான ‘ஆனந்தமடம்’ புதினத்தின் ஒரு பகுதியாக, சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் இது உருவானது. * சுதந்திரப் போராட்ட காலத்தில், ‘வந்தே மாதரம்’ என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் சக்திவாய்ந்த முழக்கமாக மாறியது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக விளங்கியதுடன்,காலப்போக்கில்இந்தியாவின்தேசபாடலாகவும் இது அங்கீகரிக்கப்பட்டது. 3 ) ரவீந்திரநாத் தாகூர் 1911ம் ஆண்டில், தனது ‘பாரத பாக்கியவிதாதா’என்றகவிதையிலிருந்து ‘ஜன கண மன’பாடலைவங்கமொழியில்எழுதினார்,அதற்குஇசையமைத்தும்கொடுத்தார்.ஜனகணமனபாடலின்வரிகளையும், இசையையும் தாகூரே ‘அல்ஹையா பிலாவல்’ ராகத்தில் முழுமையாக உருவாக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950ல் இது தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. * 1950 ஜனவரி 24ல் இந்த இரண்டு பாடல்களுமே சுதந்திர இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ‛ஜன கண மன’ பாடலில் மதரீதியான உருவகங்கள் எதுவும் இல்லை. மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்துவதால் வந்தே மாதரத்துக்கு பதில் ஜன கண மன தேசியகீதமானது. அரசு விழாக்கள் மற்றும் முக்கிய தேசிய நிகழ்வுகளில் 52 வினாடிகளில் இசைத்து முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். 4) ரவீந்திர நாத் தாகூர் எழுதி இசையமைத்த ஜன கண மன பாடல் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையிலான வரிகளுடன், எளிய இசையில் இருந்தது. இதனாலேயே ரவீந்திரநாத் தாகூரின் ‛ஜன கண மன’ நம் நாட்டின் தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டது. * ‛வந்தே மாதரம்’ தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டுதேசியகீதத்திற்குச் சமமாகப் பார்க்கப்பட்டாலும், அதன் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொது இடங்களில் பாடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்த 4 பத்திகள் நீக்கப்பட்டன. 5)ரவீந்திர நாத் தாகூர் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் சரணத்திற்கு இசையமைத்து 1896 காங்கிரஸ் மாநாட்டில் பாடி அதனை பிரபலமாக்கினார். 1937ல் தேவையில்லாத சர்ச்சைகள் வராமல் தடுக்க, முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவரே பரிந்துரை செய்தார். * அதாவது 1937 அக்டோபரில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில், ‘வந்தே மாதரம்’ பாடலின் பிந்தைய சரணங்கள் குறித்து தாகூர்தனதுகவலையைவெளிப்படுத்தினார். துர்க்கை, லட்சுமி போன்ற தெய்வங்களை பற்றிய குறிப்புகள், பல மதங்களை கொண்ட இந்த நாட்டில் அனைவரையும்உள்ளடக்கியதாக இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனால், முழுப் பாடலையும் தேசிய கீதமாகப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும் அவர் கருதினார். 5 ) வந்தே மாதரம் பாடல் இந்தியாவை ஒரு தெய்வீகத் தாயாக துர்க்கை, லட்சுமி போன்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டு அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் வரிகளை கொண்டுள்ளது. * அதேபோல் இந்த இரண்டு பாடல்களின் இசையமைப்பிலும் வித்தியாசங்கள் உள்ளன. வந்தே மாதரம் பல ராகங்களில் பாடப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர் அதன் முதல் பல்லவிக்கு இசையமைத்து 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடி காட்டினார். * ரவீந்திர நாத் தாகூர் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக நிராகரிக்கவில்லை. மாறாக, மத அடையாளங்கள் இல்லாத, தாய்நாட்டைப் போற்றும் அதன் சரணங்களை மட்டுமே ஆதரித்தார். அவரது இந்த அணுகுமுறையால்தான், பாடலின் சுருக்கப்பட்ட வடிவம் 1950-ல் தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது. * ‘ஜன கண மன’ தேசியகீத பாடலை பொறுத்தவரை ரவீந்திரநாத் தாகூர்தான் அதன் முழு படைப்பாளியாவார். தேசிய கீதமாக அறிவிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1911ல் நடந்தகாங்கிரஸ் மாநாட்டில் இந்தப் பாடலை அவரே எழுதிப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close