Others
மத்திய அரசு நீட் விலக்கு மசோதாவுக்குஉடனே ஒப்புதல் தர பேரவையில் தீர்மானம்.


இந்த சூழலில், நமது முயற்சிகளை வெற்றியடைய செய்ய இத்தீர்மானத்தை நிறைவேற்றி தரவேண்டும்.தீர்மான விவரம்: கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநிலமருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட்தேர்வு அகற்றப்படவேண்டும். இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அரசு உடனேஒப்புதல் அளிக்க வேண்டும்.தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையசட்டத்தில்தேவைப்படும்திருத்தங்களைமத்தியஅரசுமேற்கொள்ளவேண்டும்என்று தமிழகசட்டப்பேரவைஒருமனதாகவலியுறுத்துகிறது.இவ்வாறுமுதல்வர்தீர்மானத்தை முன்மொழிந்தார்.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தி.வேல்முருகன் (தவாக),ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), ஆளூர் ஷாநவாஸ் (விசிக), ஜி.கே.மணி (பாமக), மனோஜ் பாண்டியன் (ஓபிஎஸ் பிரிவு) ஆகியோர் இதை வரவேற்று பேசினர். தீர்மானத்தை எதிர்த்துபாஜகஉறுப்பினர்கள்வெளிநடப்புசெய்தனர்.தொடர்ந்து,தீர்மானத்தைஒருமனதாகநிறைவேற்றிதருமாறுமுதல்வர்ஸ்டாலின்கோரினார்.அதன்பிறகு,குரல்வாக்கெடுப்புமூலம்தீர்மானம்ஒருமனதாகநிறைவேற்றப்பட்டதாகபேரவைதலைவர்அப்பாவுஅறிவித்தார்.நாமக்கல்,தி.மலைபுதுக்கோட்டை,காரைக்குடி4புதியமாநகராட்சிகள்உதயமாகின்றன திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களின் அருகே உள்ள பேரூராட்சி கள், ஊராட்சிகளை உள்ளடக்கி புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறி விக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தமக்கள்தொகை, வருமான அளவுகள் அதற்கு தடையாக இருப்பது தெரியவந்தது.எனவே, அந்த வரையறைகளை தளர்த்தி,மக்கள்தொகைமற்றும்ஆண்டுவருமானத்தைகணக்கிடாமல்,மேற்கண்ட4நகராட்சிகளையும்மாநகராட்சிகளாகதரம்உயர்த்துவதற்கானநகர்ப்புறஉள்ளாட்சிதிருத்தசட்டமசோதாவைசட்டப்பேரவையில் அமைச்சர்கே.என்.நேருநேற்றுதாக்கல்செய்தார்.அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப் பிரிவில் மக்கள்தொகையாக இருந்த 3லட்சம்என்பது2லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொருத்தமென கருதும் எந்த ஒரு காரணத்தையும் கருத்தில் கொண்டு, எந்த ஒரு உள்ளாட்சி பகுதியையும் தேவைக்கேற்ப பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து அறிவிக்கலாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.