fbpx
Others

மத்திய அரசின் அமைப்பு சார்பில்75 பேருக்கு பாரத் சேவாக்

 புதுச்சேரியில் மத்திய அரசின் அமைப்பு சார்பில் 75 பேருக்கு பாரத் சேவாக் விருது வழங்கப்பட்டது. புதுச்சேரி 5-வது திட்ட கமிஷனில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் அமைப்பாக பாரத் சேவாக் சமாஜ் உள்ளது. இந்த அமைப்பு பல்வேறு தொழில் சார்ந்த பட்டய பயிற்சி வகுப்புகளை நடத்திட அனுமதி வழங்கி வழிநடத்துகின்றன. இந்த அமைப்பின் மாற்று மருத்துவ பட்டய பயிற்சிக்கான வேந்தராக தி சுசான்லி குழுமத்தின் தலைவர் ரவி உள்ளார். இந்த அமைப்பு மரம் நடுதல், இலவச கல்வி சேவை வழங்குதல், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்கள் மற்றும் பல்வேறு மருத்துவ சேவை பணிகளில் முழுமையாக தம்மை ஈடுபடுத்தி செயலாற்றி வருகிறது. இந்தநிலையில் தென் இந்தியாவை சேர்ந்த 75 பேருக்கு பாரத் சேவாக் சமாஜ் மூலமாக அவர்களின் சேவையை பாராட்டி பாரத் சேவா விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி புதுவை கிரீன் பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையின் தலைமை டாக்டரான பேராசிரியை உஷாரவி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக லேனா தமிழ்வாணன், டாக்டர்கள் ஜெயச்சந்திரன், முகமது இப்சுல்லா, ஜீனா சித்திக், அக்பர்கான், லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுநரும், சோர்டியா ஜூவல்லரியின் உரிமையாளருமான அசோக்குமார் சோர்டியா, தமிழக-புதுவை ஐகோர்ட்டு வக்கீல் காமேஷ்குமார், கோவை சுபா விளம்பர ஏஜென்சி மேலாண் இயக்குனர் லயன் சுபா சுப்பிரமணியம், கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க இணை செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
75 பேருக்கு பாரத் சேவாக் விருது

Related Articles

Back to top button
Close
Close