Others
மத்தியஅரசு — குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது.ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு ஏற்படுவதால் குரங்கம்மை பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல்ஏற்படுவதேகுரங்கம்மையின்அறிகுறி.எச்.ஐ.வி.யால்பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை எளிதாக தாக்குகிறது.இந்தியாவில் புதிதாக யாருக்கும் குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை.ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டம் மூலம் குரங்கம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சந்தேகத்தின் பேரில் குரங்கம்மை பரிசோதனைக்கு ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.