மதுரை மெட்ரோ ரயில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த திட்ட அறிக்கையைமத்தியஅரசுதிரும்பிஅனுப்பியுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு விடுத்த அறிக்கையில், ‘மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களை தொடங்கலாம். ஆனால் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே.மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு வாய்ந்தவை. அதோடு நீண்ட காலம் நிலைத்த தன்மையோடு இருக்க வேண்டும் என்பதால் கவனமாக திட்டமிடப்பட வேண்டும். ஆகவே குறைந்த மக்கள் தொகை உடைய நகரங்களுக்கு குறைந்த செலவில் செயல்படுத்தப்படும்பிறநகரபோக்குவரத்துதிட்டங்கள்பொருத்தமானவை. இதன்காரணமாககோவைமற்றும்மதுரைமெட்ரோரயில்திட்டங்கள்திருப்பிஅனுப்பப்படுகின்றன’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டு முந்தைய கணக்கெடுப்பு. மதுரை மாவட்டத்தில் தற்போது 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள்உள்ளனர்.அவ்வாறெனில்18வயதிற்குஉட்பட்டவர்கள்,புலம்பெயர்ந்தவர்கள், சுற்றுலா பயணிகள், பதிவு செய்யப்படாத குடியிருப்பு வாசிகள் ஆகியோரையும் சேர்த்தால் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.எனவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரி செய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசுக்கும், தமிழக அரசின் திட்ட அறிக்கை பரிசீலித்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் ” என கூறியிருந்தார் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ” 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 லட்சம் மக்கள் தொகை எனக்கூறிதிருப்பிஅனுப்பப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டுகள் பழமையானது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “திட்டம் நிராகரிக்கப்படவில்லை.விளக்கங்களுக்காகதிருப்பிஅனுப்பப்பட்டுள்ளது. எப்படி இந்த நிவாரணத்தை வழங்குவது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.