fbpx
Others

மதுரை மாநகராட்சியின் இலவசமாக நோய் வழங்ககும் திட்டமா..?

தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் இலவசமாக நோய் வழங்க உள்ள அவலநிலை!!! தூங்கா நகரம் விரைவில் நோய் நகரமாக மாற உள்ள அவலநிலை!!! மதுரை மாவட்டம் – மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் பகுதியில் , கோவிலைச் சுற்றிலும் பாதாள சாக்கடை பொங்கி வழிகிறது !!! தேரோடும் வீதிகளில் சாக்கடை நீர் பொங்குகிறது ……….. இதைப் பற்றி கண்டு கொள்ளாத மாநகராட்சி ! சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாகவே இந்த நிலை தொடர்கிறது ! நவீன எந்திரங்களான நீர் உறிஞ்சும் எந்திரங்கள் வழங்கப்பட்டும் இந்த நிலைஉள்ளது ! இப் பணிகளுக்கு ஊழியர்கள் அதிகமாக நியமனம் செய்யப்பட்டும், வேலை ஏதும் சரியாக நடைபெறவேயில்லை என்பது மிகவும் குறிப்பிடதக்கது!!! மாநகராட்சி பகுதிகளான காமராஜர்சாலை,பால்ரெங்கபுரம், அனுப்பானடி, தெற்குவாசல், கீழவாசல் மற்றும் அனைத்து மாசி வீதிகள், தெப்பகுளம் பகுதி, அண்ணநகர், வண்டியூர் பகுதிகள்எங்குபார்த்தாலும்சாக்கடைத்துர்நாற்றம்தான் வீசுகிறது ! இதனால் பொதுமக்களுக்கு பெரும் நோய் தொற்று ஏற்படுகின்ற அபாயம் தான் உள்ளது ! மேலும் அரசுஇராஜாஜி மருத்துவமனைக்கு லட்சகணக்கில் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர், இதைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் தெருவியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு உள்ளனர்……… இந்த பணிகளுக்கு அதிக ஊழியர்களை நியமனம் செய்தும் , எந்த வேலைகளும் நடைபெறவில்லை……. ஆனால் வேலைகள் பெயரலவிலே மட்டுமே நடைபெறுகிறது…….. இதைப் பற்றி எந்த மீடியாக்களும் , சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை……… தெப்பகுளம் சிக்னல் மற்றும் மருபாண்டி சிலை அருகிலும் அடிக்கடி சாக்கடை பொங்கி வழிகிறது……பொங்கி வழியும் சாக்கடையினை ,பல முறை சரி செய்துதான் பார்க்கிறது மாநகராட்சி ….. ஆனால் இவை சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! …… இவற்றிற்கு என்னதான் வழி..?… இப் பணிகளுக்கு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுத்து , மதுரை மாநகர பொதுமக்களை வேகமாக கழிவுநீரால் பரவ உள்ள நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற முன் வருமா மாநகராட்சி!!! இப் பிரச்சினையை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா !!! வரும் முன் காப்போம் என்பதெல்லாம் வெறும் விளம்பரத்திற்க்கு மட்டும் தானா ??? என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்……. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close