fbpx
Others

மதுரை – போடிநாயக்கனூர் மின்சார ரயில்…..தேனிக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..

140 கி.மீ வேகத்தில்ரயில்இயக்கப்பட்டுசோதிக்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடத்தில் இதுவரை டீசல்என்ஜின்களே இயக்கப்பட்டு வந்தன. இனி எந்த ஊரில் இருந்து மதுரை வரும் ரயிலும் அப்படியே தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு இயக்க முடியும். புதிய ரயில்கள் போடி வழித்தடத்தில் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்ட பகுதிகளில் விளையும் ப ஏலக்காய், மிளகு, காபி உள்ளிட்ட பொருட்களை வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 1909-ல் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போடிநாயக்கனூர்- மதுரை வரை சுமார் 87 கிலோ மீட்டருக்கான ரயில் சேவை தொடங்கியது. உலகப் போர் காரணமாக 1915ல் முதல் 1928 வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 முதல் 1954 வரை நிறுத்தப்பட்டது. பின்னர்சுதந்திரத்திற்குபிறகு1954முதல்சேவைதொடர்ந்தது.இந்நிலையில் நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டது. அதன்படி 2010 டிசம்பர் முதல் மதுரை -போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தண்டவாளம் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை பணி தொடங்கியது. இருப்பினும் பல ஆண்டுகளாக ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவில்லை.. கடந்த நான்கு ஆண்டுகளாகவே பணிகள் விறுவிறுப்பாக வேகம் எடுத்தன.  2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. இதனால் கிழக்கே போன ரயில் மேற்கு நோக்கி வந்தது. 12 ஆண்டுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை- தேனி வரையிலான ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மீண்டும் ரயில் சேவையை கண்டு உசிலம்பட்டி, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி அடைந்தனர். அடுத்தகட்டமாக போடிநாயக்கனூர் வரையிலான பணிகளும் கடந்த ஆண்டு ஜூன் 15 முதல் மதுரை- போடிநாயக்கனூர் இடையே அகல இரயில் பாதையில் ரயில் ஓடத்தொடங்கியது.அத்துடன் சென்னை- மதுரை துரந்தோ ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில் தற்போது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு புறப்படுகின்றன.இதனிடையே அகல ரயில் பாதை முடிந்த கையோடு, மதுரை – போடிநாயக்கனூர் இடையே உள்ள 87 கி.மீ. நீளத்திற்கு மின்மயமாக்கும் பணி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. மின் கம்பம் நடும் பணிகள் மற்றும் மின்சார வயர்கள் இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இதனிடையே மதுரைபோடிஇடையே,மதுரை,உசிலம்பட்டி,ஆண்டிபட்டி,தேனி,போடிநாயக்கனூர்ஆகியஐந்துரயில்நிலையங்கள்அமைந்துள்ளன.அவற்றை இணைக்கும் வகையில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. ரயில் நிலையங்களில் உள்ள மாற்று ரயில் பாதைகள் மற்றும் தேனியில் உள்ள சரக்கு நிலைய ரயில்பாதை ஆகியவற்றிலும் மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடந்து முடிந்துள்ளன. இந்த பணிகள் முடிந்த காரணத்தால் மதுரை – போடிநாயக்கனூர் ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைக்கான இறுதிகட்ட சோதனை ஓட்டம் இன்று நடந்தது. 140 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது,மதுரை போடிநாயக்கனூர் இடையே ரயில்பாதை மின்மயமாகி உள்ளதால், மதுரை வரை இயக்கப்படும் சில முக்கிய ரயில்களை, மதுரையில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்காமல், அப்படியே போடிநாயக்கனூர் வரை இனி இயக்க முடியும். அதேபோல் மின்வழித்தடமாக மாறி உளள்தால் புதிய ரயில்களும் மதுரை போடிநாயக்கனூர்வழித்தடத்தில் உடனடியாக இயக்க முடியும் . வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் சென்னை போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களை மதுரையுடன் நிறுத்தாமல் போடிநாயக்கனூர்வரைநீட்டிக்கவேண்டும்என்றும்மக்கள்கோரிக்கைவைத்துள்ளனர்.இதேபோல்கோவை,திருப்பூரில்உசிலம்பட்டி,ஆண்டிப்பட்டி,தேனி,போடிநாயக்கனூர்மக்கள்வேலைசெய்வதால்,தினசரி,கோவைக்குபுதியரயில்கள்இயக்கவேண்டும்என்றுகோரிக்கைவைத்துள்ளனர்.இதேபோல்போடிநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல், திருச்சிவழியாகசென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலைக்கு செல்வோருக்கு வசதியாக தினசரி காலையில் போடிநாயக்கனூரில் இருந்து செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை போடிநாயக்கனூர் வரும் வகையிலும் புதிய பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close