fbpx
Others

  மதுரை–பால்உற்பத்தியாளர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

  மதுரை ஆவினில் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதர ஒன்றியங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.7 ஊக்கத்தொகையாக வழங்ககோரி பால் நிறுத்தப்போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது; பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்காத வண்ணம் பாலினை தவறாமல் மதுரை ஆவினுக்கு வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை ஆவின் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள் பால் லிட்டருக்கு ரூ.42 தருவதால் மதுரையில் ஆவின் நிறுவனத்திற்கு பால்விநியோகத்தை நிறுத்தி உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close