fbpx
Others

மதுரை–தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில் உள்ளஜோன்ஸ்ஹோட்டலில்நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர்.வளசை. முத்துராமன். ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்.சேலம்ரத்தினகுமார் அனைவரையும்வரவேற்றார்.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.விரைவில் அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட போட்டி நடத்த வேண்டும். என்றும்ஏப்ரல்,மே மாதத்தில் மாநில போட்டி நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் விரைவில் கிடைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மாநில தலைவர் உறுதிபட தெரிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிலம்ப அமைப்புகள் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முடிவில் துணை செயலாளர். தஞ்சை ஜெலேந்திரன் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close