fbpx
Others

மதுரை–எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி யாகசம் கேட்டுபோராட்டம்..

மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பட்டியல் பழங்குடியினர் (ST) இந்து காட்டு நாயக்கன் என்று சாதி சான்றிதழ் வழங்க தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பெற்றோர்களுடன் 6-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.போராட்டத்தின்போது, தங்களது தொழிலுக்கு பயன்படுத்தும் வலைகள், கூண்டுகளை வைத்தபடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட , அவர்களது பெற்றோர் தட்டை ஏந்தி யாசகம் பெற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், மாணவர்கள் , ‘கண்டா வரச்சொலுங்க, ஆர்.டி.ஓவை கண்டா வரச்சொல்லுங்க ’ என கர்ணன் திரைப் பாடலை பாடியும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வெளிப்படுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close