fbpx
Others

மதுரையில்ரயில் பெட்டிஎரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..

மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு நடத்தி வருகிறார். உத்தரபிரதேசம் மாநிலம்லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரைவந்தடைந்தனர்  இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,சிலர்படுகாயங்களுடன்மருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவருகின்றனர். ரயில்பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாகபயன்படுத்திய சிலிண்டரால் விபத்து நேரிட்டதாக ரயில்வேநிர்வாகம்தெரிவித்துள்ளது இந்நிலையில் மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் தலைமையிலான குழுவும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.ரயில்வே போலீசார் சார்பில், தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் ரயில் பெட்டி எரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்து வருகிறார். விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரையும் நாளை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close