fbpx
Others

மதுக்கரை– பிளாஸ்டிக் பைகள்அதிகாரிகள் உதவியால் பயன்பாடு தாராளம்!

Depression in Children: Recognizing Symptoms170+ 3d Man With Big Question Mark Stock Photos, Pictures & Royalty-Free  Images - iStockகோவைமாவட்டம்,மதுக்கரை நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும்பயன்பாடுஅதிகளவில்உள்ளது.மதுக்கரை நகராட்சிக்கு 22 வார்டுகள் உள்ளன. இங்கு, காய்கறி, மளிகை, இறைச்சி கடை, ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டம்ளர், கப் உட்பட பல்வேறு பொருட்கள் தாராளமாக விற்பனை செய்தும், பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மதுக்கரை நகராட்சியில், அதிகாரிகள், அரசால் தடை விதித்து அமலுக்கு வந்த நாளில் இருந்து, ஒரு வாரம் மட்டும் கடமைக்காக பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து, துண்டு பிரசுரம் வினியோகம் செய்து, கண்காணித்து வந்தனர். மேலும், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர், தற்போது, நகராட்சியில், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இருக்கிறது. குறிப்பாக, இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களில், பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை கண்டும், காணாமல் அதிகாரிகள் உள்ளதால், நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு பெருகி வருகிறது எனவும் சில கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும். பிளாஸ்டிக் பை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுக்கரை தாலுக்கா நிருபர்
க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close